/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் துவக்கம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் துவக்கம்
ADDED : ஜன 11, 2024 05:15 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் நேற்று முதல் துவங்கியது.
திருச்சுழியில் கூட்டுறவுத் துறையின் மூலம் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்தகுமார் முன்னிலையில், நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கி துவக்கி வைத்தார்.
பின் மாவட்டத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் துவங்கப்பட்டது. மாவட்டத்தில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 753 அரிசி வகை ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை அகதிகள் முகாம்களில் 1062 குடும்பங்கள் என மொத்தம் 6 லட்சத்து 815 கார்டுகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரூ.66 கோடியே 60 லட்சத்து 33 ஆயிரத்து 338 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு இணைப்பதிவாளர் செந்தில்குமார், ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, மாவட்ட வழங்கல் அலுவலர் வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.