ADDED : அக் 23, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், திருச்சியில் வழக்கறிஞர் அழகேஸ்வரன் தாக்கப்பட்டும், அவரது சகோதரர் உமா சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் ராஜையா தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, சங்க நிர்வாகிகள் உட்பட திரளான வக்கீல்கள் பங்கேற்றனர்.