ADDED : டிச 16, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்றங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இ-பைலிங் நடைமுறையை முற்றிலும் திரும்ப பெற வலியுறுத்தி வந்த நிலையில், அதனை நிராகரிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம், நேற்று காலை11:30 மணிக்கு நீதிமன்ற வாசலில் நடந்தது.
சங்க தலைவர் ராஜையா தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

