தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பராமரிப்பு இல்லாமல் சாய்ந்த மரக்கன்றுகள்

பராமரிப்பு இல்லாமல் சாய்ந்த மரக்கன்றுகள்

பராமரிப்பு இல்லாமல் சாய்ந்த மரக்கன்றுகள்


UPDATED : அக் 20, 2026 04:58 PM

ADDED : அக் 20, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 04:58 PM ADDED : அக் 20, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சுழி: திருச்சுழி அருகே பரளச்சி - கமுதி விலக்கு ரோடு அருகில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி சாய்ந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

திருச்சுழி அருகே பரளச்சி - கமுதி விலக்கு ரோடு ஒரு ஆண்டிற்கு முன்பு நான்கு வழி ரோடாக மாற்றப்பட்டது. இதற்காக ரோடு ஓரங்கள் அகலப்படுத்துவதற்காக இந்த அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டன. பணி நடந்து கொண்டிருக்கும் போதே ரோடு ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆடு மாடுகள் மேயாத வகையில் சுற்றிலும் கம்பி வலைகள் கட்டப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், பலத்த காற்றுக்கும் மரக்கன்றுகள் பல சாய்ந்து கிடக்கின்றன.

நெடுஞ்சாலைத்துறை சாலை ஓரங்களில் மரங்களை நடுவதுடன் பணிகளை முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து பராமரித்து மரங்களை வளர்க்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us