ADDED : செப் 22, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் லெகசி 24 என்ற பெயரில் கலைத் திருவிழா நடந்தது.
தமிழகத்தில் 18 கல்லுாரிகளில் இருந்து 645 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தாளாளர் டென்சிங் தலைமை வகித்தார். முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.
மதுரை அகானா மனநல மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசினார். கலைத் திருவிழாவில் குழு நடனம், தனி நடனம், நாடகம், கோலப்போட்டி, பாடல் வரி, வேட்டை கவித்திறன், இசைக்கச்சேரி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை முதலாவது இடத்தையும் விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர், மாணவர்கள் செய்தனர்.