/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் லெகசி 25 கலை திருவிழா
/
சிவகாசி மெப்கோ கல்லுாரியில் லெகசி 25 கலை திருவிழா
ADDED : செப் 28, 2025 02:33 AM

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் லெகசி 25 என்ற பெயரில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற கலை திருவிழா நடந்தது. இதில் தமிழகத்தில் 24 கல்லுாரிகளில் இருந்து 720 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார். சென்னை செல்கான் சர்வீசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி மனிதவளத்துறை மேலாளர் பரணிதரன் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பல்வேறு போட்டிகள் நடந்தது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை முதலாவது இடத்தையும் ,விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. ஏற்பாடுகளை லெகசி 25 ஒருங்கிணைப்பாளர்கள் கங்காலட்சுமி , ஜவகர் தலைமையிலான குழுவினர் செய்தனர்.