
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருஇருதய ஆண்டவர் சர்ச்சில் இருந்து சிறுமலை அமலி அன்னை சர்ச்சிற்கு தவக்கால திருயாத்திரை நடந்தது.
இதனை நேற்று காலை 6:30 மணிக்கு வட்டார அதிபர் சந்தன சகாயம், உதவி பாதிரியார் செல்வநாயகம் துவக்கி வைத்தனர். திரளான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று சிறுமலையை அடைந்தனர். அங்கு நற்கருணை ஆசிர்வாதமும், சிலுவைப் பாதையும், இறுதியில் கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
இதில் புதுப்பட்டி, நத்தம்பட்டி, ராஜபாளையம், ஆலங்குளம், தேவதானம், நக்கனேரி, சுந்தரநாச்சியாபுரம், மாங்குடி, மீனாட்சிபுரம், மாதாங்கோவில் பட்டி பங்குகளைச் சேர்ந்த பாதிரியார்கள் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினர்.

