/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள்
/
மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள்
ADDED : ஏப் 18, 2025 02:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே குடும்ப தகராறில் மைத்துனர் முருகேசனை கத்தியால் குத்தி கொலை செய்த கார்த்திகை செல்வனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகை செல்வன் 40, இவரது மனைவி சித்ரா 35.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகைசெல்வன் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனை மாமனார் கணேசன் 52, மைத்துனர் முருகேசன் 30, ஆகியோர் கண்டித்துள்ளனர்.
இந்த பிரச்னையில் 2020 ஜூன் 3 அன்று கணேசனை தாக்கி விட்டு, முருகேசனை கத்தியால் குத்தி கார்த்திகை செல்வன் கொலை செய்தார்.
வத்திராயிருப்பு போலீசார் கார்த்திகைசெல்வனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் கார்த்திகை செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார்.

