/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீசில் புகார் கொடுத்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
/
போலீசில் புகார் கொடுத்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
போலீசில் புகார் கொடுத்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
போலீசில் புகார் கொடுத்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
ADDED : ஏப் 25, 2025 01:37 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பாட்டகுளத்தில் பெண்களை ஆபாசமாக பேசியவர் மீது போலீசில் புகார் கொடுத்த முருகனை 29, வெட்டி கொலை செய்த லாரன்ஸ் யோகராஜூக்கு 21, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பாட்டகுளம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் யோகராஜ். இவர் குடிபோதையில் அப்பகுதி பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதனை அவ்வப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளனர். 2021 ஆக., 24ல் பெண்களிடம் அவர் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த முருகன் கண்டித்து கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் தெரிவித்துள்ளர்.
அன்றிரவு தன் வீட்டில் முருகன் இருந்த போது அங்கு சென்ற லாரன்ஸ் யோகராஜ் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். லாரன்ஸ் யோகராஜை கிருஷ்ணன் கோவில் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு தரப்பில் திருமலையப்பன் ஆஜரானார். லாரன்ஸ் யோகராஜூக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.

