/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருள் சூழும் விருதுநகர் நகராட்சி தெருக்கள் ஆமைவேகத்தில் விளக்கு பொருத்தும் பணிகள்
/
இருள் சூழும் விருதுநகர் நகராட்சி தெருக்கள் ஆமைவேகத்தில் விளக்கு பொருத்தும் பணிகள்
இருள் சூழும் விருதுநகர் நகராட்சி தெருக்கள் ஆமைவேகத்தில் விளக்கு பொருத்தும் பணிகள்
இருள் சூழும் விருதுநகர் நகராட்சி தெருக்கள் ஆமைவேகத்தில் விளக்கு பொருத்தும் பணிகள்
ADDED : ஜன 07, 2024 03:49 AM
விருதுநகர்: விருதுநகரில் டிச. 31ல் டியூப்லைட் ஒப்பந்தம் முடிந்து விட்ட நிலையில் பழுது ஏற்பட்டால் புதிய விளக்கு பொருத்த முடியாத சூழலில் மக்கள் தவிக்கின்றனர்.
பகுதிவாரியாக ஆமைவேகத்தில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டு வருவதால் பல இடங்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
விருதுநகர் நகராட்சி 36 வார்டுகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டியூப்லைட்டுகளுக்கான ஒப்பந்த பராமரிப்பு 2023 டிச. 31ல் முடிந்து விட்டது. இந்நிலையில் 6 நாட்களாக டியூப் லைட் பழுதானால் கேட்க ஆளில்லாத சூழல் உள்ளது.
எல்.இ.டி., விளக்கு பொருத்தும் பணிகளும் பகுதிவாரியாக நடந்து வருகிறது. இதில் டியூப்லைட் மட்டுமே உள்ள பகுதிகளில் ஏதேனும் பழுது காரணமாக எரியாமல் போனால் எல்.இ.டி., பொருத்துவோர் வரும்வரை காத்திருக்கும் சூழல் உள்ளது.
இதனால் நகராட்சி பகுதியில் பாதி தெருக்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நகராட்சி கூட்டத்தில் எல்.இ.டி., விளக்குகளின் வெளிச்சம் போதவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் டியூப்லைட் பழுது ஏற்பட்டால் புதிய எல்.இ.டி., பொருத்த தாமதமாகும் சூழல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இருள் சூழ்ந்து காணப்படும் நிலை உள்ளது. குற்ற சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே போர்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் இருளை தவிர்க்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.