/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு அனுமதியின்றி குவாரியில் சுண்ணாம்புக்கல் கொள்ளை
/
அரசு அனுமதியின்றி குவாரியில் சுண்ணாம்புக்கல் கொள்ளை
அரசு அனுமதியின்றி குவாரியில் சுண்ணாம்புக்கல் கொள்ளை
அரசு அனுமதியின்றி குவாரியில் சுண்ணாம்புக்கல் கொள்ளை
ADDED : பிப் 18, 2025 04:36 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே அரசு அனுமதி இன்றி தனியார் கல்குவாரியில் சுண்ணாம்புக்கல் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சூர் அருகே பண்ணை மூன்றடைப்பில் தனியார் கல்குவாரி உள்ளது. இதனுடைய உரிம காலம் முடிவடைந்து விட்டதால் செயல்படாமல் இருந்துள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள், எஸ்.ஐ., வீரணன், போலீசார் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு அரசு அனுமதி இன்றி வெடிவைத்து தகர்த்து சுண்ணாம்புக்கல் கொள்ளையடிக்கப்பட்டது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். போலீசார் கிரேன் டிரைவர் சரத்குமார்,27, டிராக்டர் டிரைவர் பாண்டி, 40, இருவரையும் கைது செய்தனர். குவாரியில் இருந்த டெட்டனேட்டர் வயர்கள், ஜெலட்டின் குச்சிகள், கிரேன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.