ADDED : டிச 16, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி அருகே சித்தலகுண்டு பஸ் ஸ்டாப் அருகில் எஸ்.ஐ., அருண்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில், அவர் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மேலும் விசாரணை செய்ததில் அவர் மேல கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி 41, என்பதும் தெரிய வந்தது. திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.