நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நூலகத்தின் 150 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஐந்தாம் மாத இலக்கிய விழா நடந்தது.
பென்னிங்டன் கமிட்டி துணைத் தலைவர் முத்து பட்டர் தலைமை வகித்தார். பள்ளி துணைத் தலைவர் ஜெயக்குமாரன் முன்னிலை வகித்தார். கமிட்டி உறுப்பினர் ராஜேஷ் கனி வரவேற்றார். அறநிலையத்துறை உதவி ஆணையர் இளங்கோவன் கொஞ்சும் தமிழோடு, கொஞ்சம் தமிழாடு என்ற தலைப்பிலும், எழுத்தாளர் சங்க துணை தலைவர் நாராயணன் கொண்டாடுவோம் கோதை தமிழை என்ற தலைப்பிலும் இலக்கிய சொற்பொழிவாற்றினர்.
விழாவில் செயலாளர் ராதா சங்கர், பொருளாளர் ராஜாராம், கமிட்டி உறுப்பினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். உறுப்பினர் ராம் நாராயணன் நன்றி கூறினார்.