/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராமரிப்பு இல்லாமல் பாழாகும் கால்நடை தொட்டிகள்
/
பராமரிப்பு இல்லாமல் பாழாகும் கால்நடை தொட்டிகள்
ADDED : ஜன 17, 2024 12:42 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் பகுதியில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாததால் பாழாகி வருகிறது.
செங்குன்றாபுரம் பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இவை மேய்ச்சலுக்காக செல்லும் போது ஏற்படும் தாகத்தை தீர்க்க குடிநீர் தொட்டிகள் 2019ல் ரூ. 20 ஆயிரம் மதிப்பில் தேவையான பகுதிகளில் புதிய தொட்டிகள் உள்ளாட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில் கால்நடை தொட்டிகளுக்கு நீர் வழங்கும் மோட்டார்களில் பழுது ஏற்பட்டது. இந்த பழுதை சரிசெய்யாததால் தொட்டிகளுக்கு தேவையான நீர் வருவதில் தடை ஏற்பட்டது. புதிய தொட்டிகள் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் சேதமடைய துவங்கியுள்ளன.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ததால் நீர்நிலைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் வெயில் காலம் துவங்கி விட்டால் நீர் நிலைகளில் நீர் வற்றி வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகளுக்கு தேவையான உணவு கிடைப்பதிலேயே சிக்கல் ஏற்படும்.
அப்போது குடிக்க நீரின்றி கால்நடைகள் பாதிக்கப்படும். எனவே வெயில் காலம் துவங்கும் முன்பு தொட்டிகளுக்கு நீர் வழங்கும் மோட்டார்களை சரிசெய்து சேதமான தொட்டிகளை சீரமைத்து குடிநீர் வழங்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

