/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனநலம் பாதித்தவரை கல்லால் தாக்கி கொன்ற லோடுமேன் கைது
/
மனநலம் பாதித்தவரை கல்லால் தாக்கி கொன்ற லோடுமேன் கைது
மனநலம் பாதித்தவரை கல்லால் தாக்கி கொன்ற லோடுமேன் கைது
மனநலம் பாதித்தவரை கல்லால் தாக்கி கொன்ற லோடுமேன் கைது
ADDED : நவ 02, 2025 11:58 PM
விருதுநகர்: விருதுநகர் டி.சி.கே., பெரியசாமி தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரியப்பன் 50, நேற்று முன்தினம் வாறுகாலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவரை கல்லால் அடித்து கொலை செய்த வாடியான் தெருவைச் சேர்ந்த லோடுமேன் பாலகிருஷ்ணனை 29, பஜார் போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் டி.சி.கே., தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு டீக்கடைக்கு சென்றவர் வாறுகாலில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
விசாரணையில், வாடியன் தெருவைச் சேர்ந்த டாஸ்மாக் லோடுமேன் பாலகிருஷ்ணன், வீட்டில் வளர்க்கும் நாயிடம் நேற்று முன்தினம் அதிகாலை மாரியப்பன் தவறாக நடந்துள்ளார்.
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த அவர் கல்லால் அடித்தில் மாரியப்பன் தலையில் காயமடைந்து பலியானது தெரிந்தது. பஜார் போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.