/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளின் சுகாதார வளாகங்களுக்கு பூட்டு: திறந்தவெளி அதிகரிப்பால் நோய் தொற்று
/
ஊராட்சிகளின் சுகாதார வளாகங்களுக்கு பூட்டு: திறந்தவெளி அதிகரிப்பால் நோய் தொற்று
ஊராட்சிகளின் சுகாதார வளாகங்களுக்கு பூட்டு: திறந்தவெளி அதிகரிப்பால் நோய் தொற்று
ஊராட்சிகளின் சுகாதார வளாகங்களுக்கு பூட்டு: திறந்தவெளி அதிகரிப்பால் நோய் தொற்று
ADDED : ஜூன் 03, 2025 12:35 AM

மாவட்டம் ஊராட்சிகள் நிறைந்த பகுதி ஆகும். கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்காக உரிய வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். விளைநிலங்கள், கண்மாய் கரைகள், நீர் நிலைகள் ஆகியவற்றை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதோடு இரவு, அதிகாலை நேரங்களில்ரோடு ஓரங்களையும் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் காட்டுப் பகுதிகள், கண்மாய்க்கரை பகுதிகளுக்கு செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக பாதை மாறி விடுவதால் பெரும்பான்மையான மக்கள் ரோட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் விஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும். பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் பல்வேறு நிதியை ஒதுக்கி ஊராட்சி பகுதிகளில் பொது சுகாதார வளாகங்களை கட்டிக் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதன் அவசியத்தை அறியாத ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியமாக செயல்படுவதோடு சுகாதார வளாகங்களை பராமரிப்பதற்கு உரிய ஆட்களை நியமனம் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதால் கட்டி முடித்தும் பல ஊராட்சிகளில் பொது சுகாதார வளாகங்கள் செயல்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.
பல ஊராட்சிகளில் பயன்பாட்டிற்கு வராமலேயே புதர்மண்டி உள்ளது. சுகாதாரமான ஊராட்சி உருவாக்குவதற்காக அரசு நிதி ஒதுக்கிய போதும் உள்ளாட்சி நிர்வாகங்களில் கவனக்குறைவால் இது போன்ற அவல நிலை தொடர்ந்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் ஊராட்சியின் சுகாதார வளாகங்களை செயல்படுத்தி திறந்தவெளியை கட்டுப்படுத்த வேண்டும்.