ADDED : நவ 09, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் ரோட்டில் லோடு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பழநியில் இருந்து தூத்துக்குடிக்கு நுால் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி விருதுநகர் - அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு சென்று கொண்டு இருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த வேலுச்சாமி, 60, லாரியை ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 3:00 மணிக்கு தனியார் கல்லூரி அருகே வந்த போது நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் லாரி கவிழ்ந்தது.
விபத்தில் டிரைவருக்கு எந்தவித காயமும் இல்லை. போக்குவரத்து வேறு வழியாக திருப்பி விடப்பட்டது. போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.