UPDATED : நவ 17, 2026 03:05 AM
ADDED : நவ 16, 2026 08:22 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் சென்ற லாரி விருதுநகர் நான்கு வழிச்சாலை புல்லலக்கோட்டை ரோடு ஜங்ஷனில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் மணி ராஜா 47, காயம் இன்றி தப்பினார். இதனால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
