/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எம்.சாண்ட், உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
/
எம்.சாண்ட், உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
எம்.சாண்ட், உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
எம்.சாண்ட், உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஏப் 22, 2025 05:33 AM

சிவகாசி: எம்.சாண்ட், ஜல்லி விலை உயர்வை கண்டித்து 5 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் சுமூக தீர்வு காண வலியுறுத்தி சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
சிவகாசியில் தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள், கிரசர் உரிமையாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் குவாரிகளில் ஏப். 15 முதல் உடைகல், கிராவல், ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
அதிகபட்ச விலை உயர்வை கண்டித்து சிவகாசி வட்டார லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் ஏப். 17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று லாரி உரிமையாளர்கள் இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வலியுறுத்தி சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
லாரி உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் மலைச்சாமி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் குவாரி, கிரசர் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களால் நடத்தப்படும் குவாரிகளில் ஜல்லி, கிராவல், எம்.சாண்ட், உடைகல் ஆகியவை இரண்டு மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் டிரைவர்களுக்கு வழங்கும் படியும் நிறுத்தப்பட்டுள்ளது.
சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்களால் நடத்தப்படும் குவாரிகளில் விலை உயர்த்தப்படவில்லை. விலை உயர்வை கண்டித்து ஏப்.17 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். குவாரி உரிமையாளர்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கிரசர் உரிமையாளர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் பழைய விலையிலேயே கட்டுமான பொருட்களை சப்ளை செய்து வருகின்றனர். இதனால் லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரச்னைக்கு சமூக தீர்வு காண வேண்டும், என்றார்.
* ராஜபாளையத்தில் எம்-சாண்ட் விலை உயர்வை கண்டித்து தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.