/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி, கல்லுாரி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்
/
பள்ளி, கல்லுாரி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்
பள்ளி, கல்லுாரி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்
பள்ளி, கல்லுாரி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்
ADDED : ஆக 19, 2025 12:34 AM
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் வந்து செல்லும் பள்ளிகள் கல்லூரிகளின் வாகனங்கள், தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால் மக்கள் அலறி ஓடுகின்றனர்.
அருப்புக்கோட்டைக்கு உள்ளூர், வெளியூர்களிலிருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் 100 க்கும் மேற்பட்டவை வருகின்றன. பெரும்பாலான பஸ்களில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுதல் டெசிபல் அளவில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பள்ளி கல்லூரி நேரத்திற்கு வண்டிகளை செலுத்த வேண்டியுள்ளதால் ஹாரன்களை ஒலிக்க செய்து பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி செல்கின்றன. தனியார் பஸ்களிலும் அரசு நிர்ணயித்த 91 டெசிபல் அளவைவிட கூடுதலான அளவு கொண்ட ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
இதிலிருந்து வரும் ஒலியால் மக்களின் செவிப்பறை பாதிக்கப்படும். மக்கள் நடந்து கொண்டிருக்கும்போது ஏர் ஹாரனை ஒலிப்பதால் கவனம் சிதறி விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் இது குறித்து எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக அளவில் ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் பஸ்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.