sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்ட அரசு பஸ்களில் தாழ்வான படிக்கட்டுகள் கால்களை பதம் பார்க்குது

/

மாவட்ட அரசு பஸ்களில் தாழ்வான படிக்கட்டுகள் கால்களை பதம் பார்க்குது

மாவட்ட அரசு பஸ்களில் தாழ்வான படிக்கட்டுகள் கால்களை பதம் பார்க்குது

மாவட்ட அரசு பஸ்களில் தாழ்வான படிக்கட்டுகள் கால்களை பதம் பார்க்குது


ADDED : செப் 01, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: அரசு பஸ்களின் பயணிகள் கூட்டம் அதிகமாக செல்லும் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியப்படி பயணிக்கூடாது என்பதற்காக கதவுகள் அமைக்கும் பணிகள் நடந்தது.

இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால் தொங்கியவாறு செல்லும் பயணிகளின் கால்களை பதம் பார்க்கும் நிலையில் படிக் கட்டுகள் உள்ளது.

விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் 9 பணிமனைகளில் மொத்தம் 457 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. நகர், புறநகர், ஊரகப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு சென்று வருபவர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியப்படி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இவற்றில் தாழ்வான படிக்கட்டுகளை கொண்ட அரசு பஸ்கள் பள்ளங்களில் ஏறி இறங்கி செல்லும் போது படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பவர்களின் கால்கள் படுகாயமடைகிறது.

மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக செல்லும் அரசு பஸ்கள் இடது புறமாக சாய்ந்தவாறு ஊர்ந்து செல்லும் போது படிக்கட்டுகளில் தொங்கினால் கால்களை இழக்கும் அபாயம் உண்டாகியுள்ளது. இதை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட படிக்கட்டுகளில் கதவுகள் அமைக்கும் பணிகள் பழைய அரசு பஸ்களில் முழுமையாக முடிக்கப்படாததால் தாழ்வான படிக்கட்டுகளால் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது.

எனவே ஊரகப்பகுதிகளுக்கு இயக்கப்படும் கதவுகள் இல்லாத அரசு பஸ்களில் கதவுகளை உடனடியாக அமைத்து தாழ்வாக இருக்கும் படிக்கட்டுகளின் உயரத்தை அதிகரிக்க அரசு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.






      Dinamalar
      Follow us