/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் செடி இல்லாததால் அவதி

ADDED : ஆக 03, 2025 04:56 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மதுரை --- தூத்துக்குடி நான்கு வழி சாலை சென்டர் மீடியனில் செடிகள் இல்லாததால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் கண்கள் கூசி வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி வரையுள்ள மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையின் சென்டர் மீடியனில் அரளி மற்றும் அடர்த்தியான பூஞ் செடிகள் இல்லாமல் வெட்ட வெளியாக உள்ளது. இதனால், இந்த பகுதியில் இரவு நேரங்களில் கடக்கும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் கண்கள் கூசுவதால் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.
சுமார் 20 கி.மீ., தூரம் வரை செடிகள் இல்லாமல் உள்ளது, இதேபோன்று பந்தல்குடியில் இருந்து எட்டயபுரம் வரை ஒரு சில கி.மீ., தூரம் சென்டர் மீடியனில் செடிகள் வளர்க்கப்படாமல் உள்ளது. இதனால் நான்குவழி சாலையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தேசிய நெடுஞ்சாலை துறையினர் சென்டர் மீடியனில் செடிகள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.