
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்; ராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபாவின் 107வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு அலங்காரம் நடந்தது.
நேற்று விஜயதசமி, சாய்நாதரின் மகா சமாதி தினத்தை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு ஆரத்தியுடன் விழா தொடங்கி உற்ஸவ மூர்த்திக்கு பக்தர்கள் கரங்களால் பால் அபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மகாயாகம் 108 சங்கினால் ருத்ராபிஷேகம், கோ பூஜை நடந்தது. பக்தர்கள் மூலவருக்கு பூக்களை சமர்ப்பித்தனர். அன்னதானம், பல்லக்கு சேவையை அடுத்து இரவு ஆரத்தி நடந்தது ஏற்பாடுகளை ஷீரடி சாய் சேவா சமிதியினர் செய்தனர்.