ADDED : ஜூன் 13, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே ஒரு கிராமத்தில் தபால் பெட்டி பாதுகாப்பு இன்றி தரையில் கிடக்கிறது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கல்லுாரணி ஊராட்சி. இங்குள்ள தபால் கிளை அலுவலகம் குல்லம்பட்டியில் உள்ளது. மக்களின் வசதிக்காக தபால்களை போடுவதற்கு கிழமேல் தெருவில் உள்ள கட்டடத்தில் தபால் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல வாரங்களாக தபால் பெட்டி ரோடு ஓரத்தில் அநாதையாக பாதுகாப்பு இல்லாமல் கிடக்கிறது. இந்த பெட்டியை நம்பி எப்படி தபால்களை போடுவது என்பது கிராம மக்களின் கேள்வியாக உள்ளது. தினமும் போஸ்ட்மேன் வந்து செல்கிறார். ஆனால் தபால் பெட்டியை பாதுகாப்பாக வைக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை. தபால் அலுவலகம் தபால் பெட்டியை உரிய இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.