/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாயமான 15 கிராமங்களின் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் பிரதான ஓடை
/
மாயமான 15 கிராமங்களின் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் பிரதான ஓடை
மாயமான 15 கிராமங்களின் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் பிரதான ஓடை
மாயமான 15 கிராமங்களின் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் பிரதான ஓடை
ADDED : பிப் 24, 2024 05:46 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை வழியாக செல்லும் 15 கிராமங்களின் 2 ஆயிரம்ஏக்கரில் பாசன வசதி பெறும் பிரதான ஓடை பராமரிப்பு இன்றி, சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், ஆக்கிரமிப்பிலும் மாயமானதை கண்டுபிடிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தத்தில் உள்ள விருதுநகர் ரோட்டின் இரு புறமும் உள்ள காட்டுப் பகுதியில் பெய்யும் மழை சிறுசிறு ஓடைகள் மூலமாக வந்து பிரதான ஓடையில் வந்து மீனாட்சிபுரம் கண்மாயில் வந்து சேரும். அங்கிருந்து பல ஊரணிகள் தண்ணீர் பெருகி அருப்புக்கோட்டை ஆயிரக்கண் மாரியம்மன் தெப்பத்திற்கு வரும்.
இதே போன்று பாலையம்பட்டி, மதுரை ரோடு, டி.எஸ்.பி., அலுவலகம் பகுதியில் உள்ள ஓடை வழியாக வந்து செவல் கண்மாயில் சேரும். அங்கிருந்து காந்தி மைதானம், பாவடி தோப்பு அருகே மெயின் ஓடையில் 2 பகுதி தண்ணீரும் சேர்ந்து பெரிய கண்மாய் சென்றடையும்.
அங்கிருந்து சுக்கிலநத்தம் வழியாக திருவிருந்தாள்புரம், போடம்பட்டி, வதுவார்பட்டி, முத்துச்சாமிபுரம் ஆகிய கண்மாய்கள்நிறைந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாவில்பட்டி, மேல கரந்தை, கீழக்கரந்தை உட்பட 15 ஊர்களைச் சேர்ந்த கண்மாய்கள் பெருகி வைப்பாற்றில் உபரி நீர் சேரும் வகையில் நீர்வழிப் பாதை உள்ளது.
சுமார் 30 கி.மீ. , தூரம் உள்ள இந்த பிரதான கால்வாய் பராமரிப்பு இன்றி, தூர்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டும் சீமை கருவேலம் மரங்கள்அடர்த்தியாக வளர்ந்தும் உள்ளது. 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் இந்த பிரதானகால்வாயை கண்டு பிடித்து, பராமரித்து மழைநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர்.
இது குறித்து, வைகை, காவிரி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்,மாவட்டத்தில் இது போன்ற பல முக்கியமான நீர்வழிப் பாதைகள் காணாமல் போய்விட்டன. இவற்றை டிரோன்கள் மூலம் கண்டுபிடித்து பராமரிப்பு செய்தாலே பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் சேகரமாகும்.
மாவட்ட நிர்வாகம் தான்மனது வைக்க வேண்டும்.அரசும் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். நீர்வழிப் பாதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.