/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் பராமரிப்பு பணிகள் ரூ.45 லட்சத்தில் நாளை துவக்கம்

ADDED : செப் 20, 2025 11:24 PM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் குழந்தை நலப்பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மைய கட்டடத்தை பராமரிக்கும் பணிகள் ரூ. 45 லட்சத்தில் நாளை முதல் துவங்கப்படவுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் கட்டடம், குழந்தைகள் நலப்பிரிவு கட்டடங்கள் 15 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. இதனால் சுவர்களில் விரிசல், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.
இக்கட்டடங்களின் உள்பகுதி தற்போது வரை முறையாக பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வெளிசுவர்கள், தரைதளங்களில் சில பகுதிகளில் சேதமாகியுள்ளது. இந்த கட்டடங்களை முறையாக பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து தற்போது ரூ.45 லட்சத்தில் இரு கட்டடங்களையும் முழுமையாக பராமரிக்க தேவையான பணிகள் நாளை முதல் துவங்கப்படவுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.