/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
/
காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
ADDED : டிச 13, 2025 06:03 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே காட்டு பன்றிகளால் தொடர்ந்து மக்காச்சோள பயிர்கள் சேதமாகி வரு வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அடுத்த வடகரை, தென்கரை, நரிக்குளம், எ.லட்சுமியாபுரம், சிவலிங்காபுரம் சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. இப்பகுதி கண்மாய்களில் பதுங்கியுள்ள காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.இதனால் ஏக்கர் ஒன்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மாரிமுத்து, விவசாயி: வனத்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அவர்கள் ரோந்து வரும்போது பன்றிகளை காண முடியவில்லை என திரும்பி சென்றுவிட்டனர். இழப்பீடு வழங்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
வனத்துறையினர், வேளாண் துறையினர் அறிக்கை வேண்டும் என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் அலை கழிக்கப்படுகிறோம். காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிக்கவும் பயிர் சேதத்திற்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

