/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எங்களுக்கு உரிமை தொகை எங்கே.: வீடு திரும்ப இரவு பஸ் இல்லை: விரிவாக்க திட்ட விழாவில் பெண்கள் குமுறல்
/
எங்களுக்கு உரிமை தொகை எங்கே.: வீடு திரும்ப இரவு பஸ் இல்லை: விரிவாக்க திட்ட விழாவில் பெண்கள் குமுறல்
எங்களுக்கு உரிமை தொகை எங்கே.: வீடு திரும்ப இரவு பஸ் இல்லை: விரிவாக்க திட்ட விழாவில் பெண்கள் குமுறல்
எங்களுக்கு உரிமை தொகை எங்கே.: வீடு திரும்ப இரவு பஸ் இல்லை: விரிவாக்க திட்ட விழாவில் பெண்கள் குமுறல்
UPDATED : டிச 13, 2025 08:09 AM
ADDED : டிச 13, 2025 06:04 AM

விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்ட விழாவில் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் மனு அளித்தும், நிகழ்ச்சி முடிய தாமத மானதால் வீடு திரும்ப பஸ் இல்லை என ஒரு பெண்கள் தரப்பும் வெளியேற முயற்சித்தனர்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலை யரங்கில் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்ட துவக்க விழா நடந்தது.
இதில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பங்கேற்றனர். மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை ஏற்கனவே 1 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விடுபட்ட பெண் களுக்கு வழங்க ஆக. முதல் நவ. வரை குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்து வந்தனர். 10 தாலுகாக்களில் 67 ஆயிரத்து 551 பேர் புதிதாக விண்ணப்பித்தனர். இதில் தகுதியுள்ள 38 ஆயிரத்து 263 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு நேற்று ரூ. 3 கோடியே 82 லட்சத்து 63 ஆயிரம் வழங்கப்பட்டது.
விழாவின் போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 15 துறையில் பயன்பெறும் பெண்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு வரவில்லை என ஒரு சில பெண்கள் அமைச்சர் களிடம் கேள்வி எழுப்பி னர். அதை தொடர்ந்து அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், உரிமை தொகை வேண்டி மனு அளிக்க அறிவுரை வழங்கினார். இதையடுத்து சிலர் மனு அளித்தனர்.
இந்நிலையில் இரவு 7:00 மணி ஆகியும் நிகழ்ச்சி முடியவில்லை. இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை எனக் கூறி தங்களை வெளியே விட வேண்டும் என இன்னொரு பெண்கள் தரப்பு அங்குள்ள அதி காரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
காலையிலேயே வர வழைக்கப்பட்ட பலருக்கு முறையான உணவு வழங்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டி னர். பின் நிகழ்ச்சி முடிந்ததும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மக்களின் குறைகளை கேட்டு அதை கனிவோடு நிவர்த்தி செய்யும் இடத்தில் நாங்கள் உள்ளோம். அவர்கள் என்னிடம் அளித்த மனுக்களை கலெக்டரிடம் அளித்துள்ளோம். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.

