/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றிகளால் பாழாகும் மக்காச்சோளம்
/
காட்டுப்பன்றிகளால் பாழாகும் மக்காச்சோளம்
ADDED : நவ 20, 2024 06:34 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று கிராமங்களில் காட்டு பன்றிகள் மக்காச்சோளத்தை பாழாக்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரின் தென்பகுதியில் நாச்சியார் பட்டி, ராமலிங்கபுரம், அச்சம் தவித்தான், பிள்ளையார் குளம், அத்திகுளம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இங்கு ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிற்சி செய்து வருகின்றனர்.
தற்போது மக்காச்சோளம் நன்கு விளைந்த நிலையில் இரவு நேரங்களில் காட்டுபன்றிகள் நிலத்திற்குள் புகுந்து மக்காச்சோளத்தை சேதப்படுத்தி வருகிறது.
இரவு காவலுக்கு இருக்கும் விவசாயிகள் காட்டு பன்றிகளை ஒரு பக்கம் விரட்டினாலும் மறுபக்கம் புகுந்து அங்குள்ள மக்காச்சோளத்தையும் நாசமாக்கி விடுகின்றன. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பிற்கு ஆளாகியும் அச்சத்துடனும் உள்ளனர்.
எனவே, மாவட்ட வனத்துறை, விவசாயத் துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

