/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்
/
மக்காச்சோளம் விதை நடவு மும்முரம்
ADDED : அக் 30, 2025 03:33 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலியாக மக்காச்சோள பயிருக்கான ஐப்பசி பட்ட விதை நடவு தீவிரமடைந்துள்ளது.
மாவட்டத்தில் 37 ஆயிரம் எக்டேர் மக்காசோளம் பயிரிடப்பட்டு வருகிறது.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற மலை அடிவாரப்பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தாலும் அந்த நகரங்களின் கிழக்கு பகுதி கிராமங்களிலும், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் பருவ மழையை நம்பி பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டும் வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் ஐப்பசி பட்ட நடவிற்காக நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தவர்கள், தற்போது விதை நடவு செய்ய துவங்கி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றிய பகுதிகள் ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், இருக்கன்குடி, பாலவனத்தம், பந்தல்குடி, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர், விருதுநகர், எரிச்சநத்தம், அழகாபுரி, எம்.புதுப்பட்டி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம் நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் பெரிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் இருந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருகிறது.

