/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிரம்பியது மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்
/
நிரம்பியது மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய்
ADDED : நவ 03, 2024 04:16 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி நேற்று அதிகாலை மறுகால் விழுந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து பேயனாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் குளித்து வருகின்றனர்.
மேலும் மம்சாபுரம் வாழைகுளம், முதலியார் குளம், வேப்பங்குளம் கண்மாய்க்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் வாழைக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டு நிரம்பி நேற்று அதிகாலை மறுகால் விழுந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மம்சாபுரம் மக்கள் அங்கு குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர்.
இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.