/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரம் செண்பக தோப்பு ரோடு சேதம்
/
மம்சாபுரம் செண்பக தோப்பு ரோடு சேதம்
ADDED : ஏப் 22, 2025 05:25 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தின் மேற்கு பகுதியில் இருந்து செண்பகத் தோப்பிற்கு செல்லும் ரோடு பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் விவசாயிகள் விளைபொருட்கள் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத் தோப்புகளிலிருந்து மம்சாபுரம் வரை ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மா, தென்னை, வாழை, நெல் உட்பட பல்வேறு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்காக மம்சாபுரம் விவசாயிகள் சைக்கிள்கள் மற்றும் டூவீலர்களில் உரம், விதைகள், விளைபொருட்கள் கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் மம்சாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அத்தி துண்டு வனத்துறை செக்போஸ்ட் வரை பல இடங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை தார் ரோடு பெயர்ந்து குண்டும், குழியுமாகி சேதமடைந்து காணப்படுவதால் டூவீலர்களில் செல்லும் விவசாயிகள் நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க சேதமடைந்த ரோட்டினை காலதாமதமின்றி சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.