/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது
/
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : டிச 08, 2024 05:50 AM

நரிக்குடி : அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத்திறனாளியிடம் ரூ.10லட்சம் மோசடி செய்த முருகனை கைது செய்த போலீசார் , மேலும் 11 பேரை தேடி வருகின்றனர்.
நரிக்குடி பனைக்குடியைச் சேர்ந்தவர் உதயகுமார் 31. மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவர் கட்டனூர் அருகே பொட்டப்பச்சேரியை சேர்ந்த முருகனுடன் பழக்கமானார். திருச்சுழி நெடுஞ்சாலைத் துறையில் வேலை பார்ப்பதாகவும், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகவும் உதயகுமாரிடம் முருகன் ஆசை வார்த்தை கூறி, ரூ 15 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தார். ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் பேரம் பேசப்பட்டது.
பல்வேறு கட்டங்களில் முருகன், அவரது தந்தை சேகர், நண்பர்கள் சண்முகசுந்தரம், பஷீர்கனி, பிரபு, சூரியன், ஹேமந்திர விஸ்வா, ஞானவேலன், சண்முகன், சதீஷ்குமார் ஆகியோருக்கு வங்கி மூலம் பணம் கொடுக்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.
விசாரித்ததில் நெடுஞ்சாலைத்துறையில் முருகன் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தது., திருச்சுழி நீதிமன்ற உத்தரவுபடி 12 பேர் மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.