/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர் கைது
/
நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர் கைது
ADDED : ஜன 17, 2025 12:46 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரத்தில் வன விலங்குகளை வேட்டையாட 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த பொன்ராஜ் 22, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று மதியம் 2:00 மணிக்கு மம்சாபுரம் எஸ்.ஐ., பாரதிராஜா, மம்சாபுரம் வாலங்குளம் கண்மாய்க்கு அருகே பள்ளி விளையாட்டு மைதானம் முன் போலீசாருடன் வாகன சோதனை செய்தார். அந்த வழியாக டூவீலரில் வந்த மம்சாபுரம் கொன்னையாண்டி தெருவை சேர்ந்த பொன்ராஜ் 22, என்பவர் போலீசாரை பார்த்து வந்த வழியே திரும்பி ஓடினார். அவரை பிடித்து விசாரிக்கையில் பையில் கொய்யாப்பழங்கள், 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. நாட்டு வெடிகுண்டுகள் திணிக்கப்பட்ட கொய்யாப் பழங்களை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.