/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது
/
சீல் வைத்த ஆலையில் பட்டாசு தயாரித்தவர் கைது
ADDED : ஜூலை 06, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை கங்கரக்கோட்டையை சேர்ந்தவர் பால்பாண்டியன் இவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை அப்பகுதியில் உள்ளது.
விதி முறை மீறல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பட்டாசு ஆலைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைத்த இந்த பட்டாசு ஆலைக்குள். வி. ஏ.ஓ. கலைச்செல்வி தலைமையில் போலீசார் சோதனை செய்த போது சிவகாசியை சேர்ந்த வேங்கையன், 31.பேன்சி ரக பட்டாசு தயாரித்தார்.அவரிடம் இருந்து பட்டாசுகளையும் மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஆலை அதிபர் மீதும் வழக்கு பதிந்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.