/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
/
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : செப் 05, 2025 12:00 AM
சாத்துார்: வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன், 47. 2025 ஆக.9ல் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். இந்த வழக்கில் பொன்பாண்டியன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி .கண்ணன் பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பொன் பாண்டியனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்று கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருது நகர் எஸ்.பி.கண்ணன் தெரிவித்துள்ளார்.