/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயிலில் புகையிலை கடத்தியவர் கைது
/
ரயிலில் புகையிலை கடத்தியவர் கைது
ADDED : ஏப் 24, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:கோவில்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 65. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்த பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ புகையிலை பாக்கெட் கடத்தி வந்தார்.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்தபோது சாத்துார் இன்ஸ்பெக்டர் கமல், எஸ்.ஐ., அருண்குமார் தலைமையிலான போலீசார் சோதனை செய்து அவரிடம் இருந்து ரூ. 19, 242 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது

