/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறித்தவர் கைது
/
வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறித்தவர் கைது
வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறித்தவர் கைது
வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறித்தவர் கைது
ADDED : செப் 24, 2025 06:26 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி இ.பி., காலனியை சேர்ந்த லலிதா, 62, இவர் 3 நாட்களுக்கு முன்பு, காலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் சென்றார். பின்னால் வந்த நபர் மூதாட்டி கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து ஓடிவிட்டார். டவுன் போலீசார் அந்தப் பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதிலிருந்த நபரை விசாரிக்கையில் அவர் செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் 32, என்பதும், நெசவாளர் காலனி ஆர்ச் அருகில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது.
அவருடைய அலை பேசி எண் மூலம் ஆய்வு செய்ததில், அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி புறவழிச் சாலையில் இருப்பது தெரிய வந்தது. டவுன் போலீசார் அங்கு சென்று அவனை கைது செய்து அவனிடம் இருந்து 10 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.