/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தலைமைச் செயலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
தலைமைச் செயலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜன 07, 2025 12:25 AM

ராஜபாளையம்; சென்னை தலைமைச் செயலகம், டி.ஜி.பி அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கார்த்திக்கேயனை 47, போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பை சேர்ந்தவர் கார்த்திகேயன். பெயிண்டர். மனைவி, மகள் உள்ளனர். ராஜபாளையம் ஆர்.ஆர். நகரில் வசிக்கிறார்.  நேற்று முன்தினம் மதுபோதையில் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து பாருங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார்.
சைபர் கிரைம் மூலம் அலைபேசி எண் முகவரியை வைத்து  விசாரணை செய்ததில் வத்திராயிருப்பில் இருந்த போது ஏற்கனவே இரண்டு முறை மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து பலமுறை இதே செயலை செய்ததால் போலீசார் கார்த்திகேயனை கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

