/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கழிவுகளை எரித்தவர் தீக்காயம்
/
பட்டாசு கழிவுகளை எரித்தவர் தீக்காயம்
ADDED : டிச 02, 2025 04:21 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி ரயில்வே கேட் அருகே பழைய டாஸ்மாக் காம்பவுண்ட் சுவர் பகுதியில் கிடந்த குப்பையை தீயிட்டு எரித்த போது பட்டாசு கழிவுகள் வெடித்ததில் எம்.புதுப்பட்டி முனிச்செல்வம் 33, காயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி அருகே கோபாலன்பட்டியைச் சேர்ந்தவர் முனிச்செல்வம். இவர் நேற்று காலை 10:30 மணிக்கு துலுக்கப்பட்டி ரயில்வே கேட் அருகே முன்பு டாஸ்மாக் செயல்பட்ட கட்டடத்தின் காம்பவுண்ட் சுவரின் அருகே கிடந்த குப்பையை எரிக்க முயன்றார்.
அப்போது குப்பையுடன் கிடந்த பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்து வெடித்ததில் முனிச்செல்வம் காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

