/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவியை கொலை செய்து உடலை எரித்த சிவகாசியை சேர்ந்தவர் கைது உடந்தையாக இருந்த தம்பியும் கைது
/
மனைவியை கொலை செய்து உடலை எரித்த சிவகாசியை சேர்ந்தவர் கைது உடந்தையாக இருந்த தம்பியும் கைது
மனைவியை கொலை செய்து உடலை எரித்த சிவகாசியை சேர்ந்தவர் கைது உடந்தையாக இருந்த தம்பியும் கைது
மனைவியை கொலை செய்து உடலை எரித்த சிவகாசியை சேர்ந்தவர் கைது உடந்தையாக இருந்த தம்பியும் கைது
ADDED : பிப் 14, 2025 02:17 AM

தென்காசி, பிப்.14--
தென்காசி அருகே இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரும், கணவரின் தம்பியும் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே ஈனா விலக்கு குளத்துப் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. எஸ்.பி. அரவிந்த் தலைமையில் போலீசார் விசாரித்தனர். பெண்ணின் ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது. காலில் மெட்டி இருந்தது. அப்பகுதியில் கார் வந்து சென்றது கேமராக்களில் பதிவாகியிருந்தது.
விசாரணையில் அந்த கார் சிவகாசியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் காரை தமது நண்பர் ஜான் கில்பர்ட் வாங்கி சென்றதாக கூறினார். போலீசார் நேற்று ஜான்கில்பர்ட் என்ற பிரேம்ராஜை 31, கைது செய்தனர்.
சிவகாசி பாரதி நகரை சேர்ந்த ஜெரால்டு மகன் ஜான் கில்பர்ட். பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கமலி 30, என்ற டெய்லருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் . 6 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். 5 வயதில் மகள் உள்ளார்.
கமலியின் நடத்தையில் ஜான் கில்பர்ட்க்கு சந்தேகம் ஏற்பட்டது. பிப்., 9ல் தகராறில் கமலியின் தலையில் இரும்பு கம்பியால் ஜான்கில்பர்ட் அடித்ததில் அவர் இறந்தார்.
அருண்குமாரின் காரை வாங்கி டிக்கியில் கமலியின் உடலை எடுத்துச்சென்று எங்காவது வீசி விட முடிவெடுத்து சென்றார். அவருடன் அவரது சித்தி மகன் தங்க திருப்பதி 22, உடன் சென்றார்.
இரண்டு நாட்களாக தென்காசி ,குற்றாலம் பகுதிகளில் காரில் கமலியின் உடலுடன் இருவரும் சுற்றி திரிந்தனர்.
பிப்.,11ம் தேதி இரவில் இலத்தூர் காட்டுப்பகுதியில் வீசிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கார் அடையாளம் தெரிந்ததால் சிக்கினர். ஜான் கில்பர்ட், தங்க திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.