/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது
/
தாய், தந்தை, அண்ணனை தாக்கியவர் கைது
ADDED : செப் 27, 2024 04:22 AM
சாத்துார்: வெற்றிலையூரணியை சேர்ந்தவர் லட்சுமணன், 70. இவர் மனைவி அந்தோணியம்மாள், 60. இவர்களது மகன்கள் அந்தோனி பிச்சை, 43. மைக்கேல்ராஜ், 40. மகன்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
லட்சுமணனுக்கு சொந்தமான பூர்வீகவிவசாயநிலம் உள்ளது. இந்தநிலத்தை பிரித்து தரும்படி மைக்கேல் ராஜ் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் லட்சுமணன், அந்தோணியம்மாள், அந்தோணி பிச்சை வீட்டில் இருந்தபோது அங்கு வந்தமைக்கேல்ராஜ் சொத்தை பிரித்து தரக் கேட்டதுடன் ஆத்திரமடைந்து கைகளால் தாய், தந்தையை தாக்கினார்.
தடுக்க வந்த அண்ணன் அந்தோணி பிச்சையையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். வெம்பக்கோட்டை போலீசார் மைக்கேல்ராஜ் கைது செய்து விசாரிக்கின்றனர்.