/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது
/
மாணவர்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது
ADDED : பிப் 01, 2025 02:12 AM
விருதுநகர்:விருதுநகரில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அழகர்சாமியை 35, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தங்கள் பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவிடம் தெரிவித்துள்ளார்.ஜன. 30 காலை பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் ராஜேஷ் விமல்தாஸ் குழந்தை பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் உடன் பயிலும் மூன்று மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் அறையில் வைத்து விசாரித்தனர்.
அப் பகுதியை சேர்ந்த மாவு விற்கும் அழகர்சாமி, பொங்கல் விடுமுறையின் போது இப்பள்ளியின் 8 ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிந்தது. பின் பணம் கொடுத்து அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர். இரு முறை இதே போன்று அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அழகர்சாமியை போலீசார் கைது செய்தனர்.