ADDED : பிப் 10, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தலைமையாசிரியர் சரவணகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் அனைத்து பெற்றோர்களின் அலைபேசியில், மணற்கேணி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது.
இதன் மூலம் எளிய முறையில் பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். போட்டி தேர்வுகள், பயனுள்ள தகவல்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை புஷ்பராணி நன்றி கூறினார்.

