/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேன்ஹோல் பள்ளத்தில் கம்பு விபத்துக்கு வழி
/
மேன்ஹோல் பள்ளத்தில் கம்பு விபத்துக்கு வழி
ADDED : ஜூலை 31, 2025 03:30 AM

விருதுநகர் : விருதுநகர் காமராஜர் பைபாஸ் ரோட்டில் மேன்ஹோல் பள்ளத்தில் கம்பு நட்டு வைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் மேன்ஹோல்கள் சற்று உயர்ந்து விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. வாடியான் தெரு, தந்திமரத்தெரு, கீழக்கடைத்தெரு, காசுக்கடை பஜார் போன்ற பகுதிகளில் மேன்ஹோல் சேதமாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது பாத்திமாநகர், சர்ச் சந்திப்பு இறக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு பள்ளமாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில மேன்ஹோல்கள் சேதமானால் அவை நடுவே கம்பை வைப்பது வாடிக்கையாக உள்ளது. விருதுநகர் காமராஜர் பைபாஸ் ரோட்டில் மேன்ஹோல் பள்ளத்தில் கம்பு நட்டு வைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.