/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.எப்.ஆர்., கல்லுாரிக்கு மஞ்சப்பை விருது
/
எஸ்.எப்.ஆர்., கல்லுாரிக்கு மஞ்சப்பை விருது
ADDED : செப் 29, 2024 05:05 AM
சிவகாசி : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி தவிர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக மஞ்சப்பை விருது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இவ்விருதுக்காக சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரி அகத்தர உறுதிப்பாட்டு மையம் சார்பில் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. அதன்படி இக்கல்லுாரி மாநில அளவில் இரண்டாவது இடத்தை பெற்றது. அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்ய நாதன் ரொக்கப் பரிசு ரூ. 5 லட்சம், சான்றிதழ் வழங்கினார்.
கல்லுாரி சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, விவசாயிகள் அமைப்பு திட்ட அலுவலர் மைதீன் பாத்திமா பேகம் பெற்றுக் கொண்டனர். கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா, ஆகியோர் விருது பெற காரணமான கல்லுாரி முதல்வர் சுதா பெரிய தாய், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.