/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேலை கேட்டு உடல் தானம் செய்தவரின் மனைவி மனு
/
வேலை கேட்டு உடல் தானம் செய்தவரின் மனைவி மனு
ADDED : ஜன 30, 2024 07:20 AM
விருதுநகர் : ராஜபாளையத்தில் உடல் உறுப்பு தானம் செய்த ஊராட்சி துாய்மை காவலரின் மனைவி, வேலை கோரி கலெக்டரிடம் மனு அளித்தார்.
ராஜபாளையம் அருகே சேத்துார் முத்துச்சாமிபரம் ஊராட்சியில் துாய்மை காவலராக பணியாற்றி இறந்த மாரியப்பனின் உடல் உறுப்புகள்2023 நவ.ல் தானம் செய்யப்பட்டது.. வறுமையில் வாடும் அவரது மனைவி ராஜேஸ்வரி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: எனக்கு மூன்று குழந்தைகள்உள்ளன.
பழைய குப்பை, இரும்பு பொறுக்கி குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். ஏழ்மை நிலையில் தவிக்கிறேன். குழந்தைகளின் உணவு செலவுக்கு கூட சிரமமாக உள்ளது. ஏதாவது அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வழங்கி தர வேண்டுகிறேன், எனகேட்டுள்ளார்.