/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
‛' மரக்கார் பிரியாணி' நிறுவனர் குண்டாசில் கைது தமிழகத்தில் முதல் முறையாக நடவடிக்கை
/
‛' மரக்கார் பிரியாணி' நிறுவனர் குண்டாசில் கைது தமிழகத்தில் முதல் முறையாக நடவடிக்கை
‛' மரக்கார் பிரியாணி' நிறுவனர் குண்டாசில் கைது தமிழகத்தில் முதல் முறையாக நடவடிக்கை
‛' மரக்கார் பிரியாணி' நிறுவனர் குண்டாசில் கைது தமிழகத்தில் முதல் முறையாக நடவடிக்கை
ADDED : ஆக 05, 2025 04:50 AM

விருதுநகர்: மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமை தருவதாக ரூ. 12 கோடி மோசடியில் ஈடுபட்ட கங்காதரன் பொருளாதார குற்றத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விஜயரங்கபுரத்தைச் சேர்ந்தவர் கங்காதரன்.
இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி, ட்ரோல் டோர் இந்தியா பிரைவேட் லிமிடெட், கத்தெல் காபே ஆகிய நிறுவனங்களை துவக்கியுள்ளார்.
இதில் பிரியாணி கடையின் கிளை உரிமை தருவதாகவும், மாதம் ரூ. 50 ஆயிரம் லாபம் பெறலாம் எனக் கூறி 21 இடங்களில் மாதிரி கடைகளை திறந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த 239 பேரிடம் தலா ரூ.5.18 லட்சம் என மொத்தம் ரூ. 12 கோடிக்கு மேல் பெற்றார்.ஆனால் கிளைகளை துவங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதால் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கங்காதரன், அவரது மனைவி மரியநாயகம் மீது வழக்கு பதிந்தனர். கங்காதரன் ஜூலை 7ல் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.பொருளாதார குற்றப்பிரிவு தென் மண்டல எஸ்.பி., சரவணக்குமார் பரிந்துரையில் விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா,
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கங்காதரனை கைது செய்ய உத்தரவிட்டார்.
பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதற்காக தமிழகத்திலேயே முதல் முறையாக கங்காதரன் குண்டர் சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.