நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட மேம்பாட்டுப் பிரிவு சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடந்தது.
இப்போட்டி அரசு மருத்துவக்கல்லுாரி வளாக நுழைவு வாயிலில் இருந்து துவங்கி சூலக்கரை மேடு வரை சென்று மீண்டும் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நிறைவு அடைந்தது. இதில் 17 வயது முதல் 25 வயது வரையிலான பிரிவில் 75 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 83 பேர் பங்கேற்றனர். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 37 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்றனர்.
இதில் வென்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 2 ஆயிரம், நான்காவது இடம் முதல் பத்தாவது இடம் வரை ரூ.ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.