/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியம் தாமதம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியம் தாமதம்
அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியம் தாமதம்
அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியம் தாமதம்
ADDED : ஏப் 16, 2025 08:49 PM
விருதுநகர்:அரசு நிதி ஒதுக்காததால், அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியம் வரவில்லை.
தமிழகத்தில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் உள்ளனர். அங்கன்வாடியும், சத்துணவு திட்டமும், சமூகநலத்துறையின் கீழ் இயங்குகின்றன. இவ்விரண்டிலும், ஓய்வூதியர்கள் உள்ளனர். ஆனால், சத்துணவு திட்ட ஓய்வூதியர்களுக்கு, மார்ச் மாத ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு விட்டது. ஆனால், அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரவு வைக்கப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் கூறியதாவது: ஒரே துறையின் கீழ் செயல்படும் இருவேறு பிரிவுகளுக்கு, ஏன் அரசு பாரபட்சம் காட்டுகிறது. தேதி 16 ஆகி விட்டது. இந்த ஓய்வூதிய பணத்தை வைத்து தான், பலர் மருத்துவ செலவுக்கு திட்டமிட்டிருப்பர். தாமதம் செய்யாமல், உடனே மார்ச் மாத ஓய்வூதியத்தை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.